Thursday, February 24, 2011

சமாதி = படிக்கும் அறை... புதிய அகராதி!


முன் குறிப்பு: 
இது முற்றிலும் நகைச்சுவைக்காக எடுத்த முயற்சியே தவிர,  தாய் தமிழைக் கொச்சைப் படுத்துவதற்காக அல்ல, அல்ல, அல்லவே அல்ல!


சற்றே வித்தியாசமாகச் சிந்தித்தால் சில சொற்களுக்குப் புதிய பொருள் கிடைக்கும். இதோ சில உதாரணங்கள்:


கல்லறை = படிக்கும் அறை (கல் = படி!)

நிலவியல் = நிலவைப் பற்றிப் பேசும் துறை (நிலவு + இயல்)

உளவியல் = துப்பறியும் துறை (உளவு + இயல்)

களவியல் = களம் பற்றிய துறை (களம் = இடம்; ஆடுகளம், போர்க்களம்)


வேதியல் = வேதம் பற்றிய துறை (வேத + இயல்)


கற்பியல் = ஆசிரியத் துறை (கற்பி + இயல்)


எண்ணியல் = எண்ணங்களைப் பற்றிய துறை (எண்ணு + இயல்)


இந்தச் சொற்களுக்கு உண்மையான பொருள் (வழக்கில் இருப்பது):

கல்லறை = சமாதி

நிலவியல் = பூமி பற்றிப் பேசும் துறை (நிலம் + இயல்)

உளவியல் = மனம் பற்றிய  துறை (உளம்  + இயல்)

களவியல் = மணக்கும் முன் காதல் பற்றிய துறை (களவு + இயல்)


வேதியல் = இரசாயனத்  துறை (வேதி + இயல்)


கற்பியல் = (பெண்களின்?!) கற்பைப் பற்றிப் பேசும்  துறை (கற்பு + இயல்)

எண்ணியல் = கணிதம் ( எண் + இயல் )

இங்கே என் கைவரிசை முடிகிறது!

உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி எழுப்புங்கள்! அது எங்கெல்லாம் இழுத்துச் செல்லுகிறது பாருங்கள் உங்களை! முடிந்தால் எனக்கும் சொல்லுங்கள்!

- மனம் திறந்து... (மதி)

பின் குறிப்பு: 
  1. கல்லறை என்ற சொல்லை இப்படி வித்தியாசமாகப் பார்த்தவள், என் அண்ணாவின்  பத்து வயதுப் பெயர்த்தி, இனியை.  
  2. அந்த மாறுபட்ட சிந்தனை தான் இந்தப் பதிவுக்கே  உயிரூட்டியது!
  3. இது முற்றிலும் நகைச்சுவைக்காக எடுத்த முயற்சியே தவிர,  தாய் தமிழைக் கொச்சைப் படுத்துவதற்காக அல்ல, அல்ல, அல்லவே அல்ல!


14 comments:

♔ம.தி.சுதா♔ said...

தமிழை ரசித்துச் சுவைத்தேனுங்க நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

♔ம.தி.சுதா♔ said...

ஏன் இன்ட்லியில் சேர்க்கல..

ஏதோ profile பார்க்கச் சொன்னிங்க ஒண்ணுமே விளங்கலிங்க...

கே. ஆர்.விஜயன் said...

ரொம்ப வித்தியாசமாத்தான் யோசிக்கிறீங்க.

Dubukku said...

ஆஹா....நல்லாத்தேன் யோசிக்கிறீங்க :))

ஆனா உண்மையான தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டால் இந்த பதங்களை எப்படி பிரிக்கலாம்ன்னு சொல்லலாம் :) நம்பள்கீ தமிழ் அவ்ளோ வராது சாரி

மனம் திறந்து... (மதி) said...

கே. ஆர்.விஜயன்: வாங்க...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

Dubukku: நன்றி தலைவரே, முதல் கமெண்டுக்கு!
இது சும்மா விளையாட்டு தாங்க! தமிழ் ஆர்வலர்கள் கிட்டே போனா தர்ம அடிதாங்க கிடைக்கும்!....ஓஹோ...அதான் உங்க ஆசையா...அவ்வ்வ்வவ்வ்வ்வ்! ஏங்க இந்தக் கொலை வெறி உங்க சிஷ்யன் மேல!

Philosophy Prabhakaran said...

அய்யய்யோ முடியலைங்க... இப்பவே கண்ணை கட்டுதே...

ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை...

மனம் திறந்து... (மதி) said...

Philosophy Prabhakaran: இந்தாங்க, குழம்பி...குடிங்க...சரியாகிடும்! அட...நான் ஏற்கெனவே குழம்பிப் போயிருக்கேன்...நீங்க வேறன்னு...கோவிச்சுக்காதீங்க ! நான் குழம்பின்னு சொன்னது coffee ங்க!

தமிழ் இண்ட்லியில் சரியா இணைச்சிட்டேங்க! நன்றி! நீங்க முதல்லே சொன்னப்பவே செஞ்சிட்டேன்...ஆனா வழக்கம் போல சொதப்பிட்டேன்...ஆங்கில இண்ட்லியில் இணைச்சிருந்தேன்! நீங்க ரெண்டாவது முறையா இடித்துரைத்தபோது தான் நிஜமாவே உறைச்சுதுங்க!

ம.தி.சுதா: உங்களுக்கும் தாங்க! நன்றிங்க!

அப்பாவி தங்கமணி said...

ஆஹா...எப்படி எல்லாம் யோசிக்கறீங்க...:)

மனம் திறந்து... (மதி) said...

அப்பாவி தங்கமணி: பின்னே, ரூம் போட்ட காசு வீணாப் போயிடக்கூடாதில்ல! :)))

எல் கே said...

அட சாமி. எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க.

//கற்பியல் = பெண்களின் கற்பைப் பற்றிப் பேசும் துறை (க////

கற்பியல் = கற்பைப் பற்றிப் பேசும் துறை அவ்வளவே

siva said...

நம்பள்கீ தமிழ் அவ்ளோ வராது சாரி
//
REPEATU..
HAHAHA...

மனம் திறந்து... (மதி) said...

எல் கே: வாங்க...!

1. //அட சாமி. எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க// "அப்பாவி"க்குச் சொன்ன பதிலேதான் உங்களுக்கும்!
2. கற்பியலைப் பற்றிச் சிறிய கருத்து வேறுபாடு உண்டு, இருப்பினும் உங்கள் கருத்தையும் ஏற்று, என் வியப்பையும், கேள்வியையும் சேர்த்துத் திருத்தி இருக்கிறேன், இடுகையை!

Siva: ha ha! :)))

இராஜராஜேஸ்வரி said...

குழந்தைகளின் சிந்தனையே வரயறுக்க முடியாதவைகள் தான்.

மனம் திறந்து... (மதி) said...

இராஜராஜேஸ்வரி: ஆமாங்க! குழந்தைகள் சிந்தனை வரையறைக்கு உட்படுத்த முடியாதது தான்! நம்முடைய மரபணுக்களின் உதவியுடன், நம்மையும் தாண்டிச் சிந்திக்கும் குழந்தைகளே பரிணாம வளர்ச்சியின் அடையாளம்! குழந்தைகள் சிந்தனை பெரும்பாலும் உண்மையாகவும், நேர்மையாகவும், கள்ளம் கபடம் இன்றியும், நேர்க்கோட்டிலும், தெளிவாகவும் இருக்கும்! வளர வளரத் தான் மனித சிந்தனை தூய்மை இழக்கிறது, முரண்படுகிறது, வக்கிரமாகிறது, மேடு பள்ளங்களை உருவாக்குகிறது...!
ஜாதி, மதம் என்பதை எல்லாம் குழந்தைகளுக்குப் புரிய வைக்க முயன்று, தோற்றுப் போய், பின்பு திணித்து, மிரட்டி அல்லவா பதிய வைக்கிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள்! :)))))

Post a Comment

ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!