Thursday, March 17, 2011

தலைப்பு, மேட்டரு... தனிக்குடித்தனம்! (PASSWORD புதையல்: பாகம் - 2 )

 
நான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி ,  PASSWORD புதையல் பற்றிய பரபரப்பான, சுவாரஸ்யமான  இரண்டாவது பதிவு இது.  பிரபலங்களும், சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களும் எப்படியெல்லாம் ரகசியப் புதையல் தேர்ந்து எடுக்கலாம், எடுப்பார்கள் என்று ஒரு அழகான கற்பனை இங்கே விரிகிறது, உங்கள் முன்னால், உங்களுக்காக!

Software Developer (Debugging பிடிக்காதவர்)
ஆணிய , நானே  புடுங்கணுமா ? எங்கே  வச்சேன்னே தெரியலையே!
 
அலுவலக சுகவாசி
சம்பளம் வாங்கறேல்ல, வேலையைப்பாருண்றானே! இன்னாய்யா இது புதுக்கதை?

வேலைக்காகவா ஆபீசுக்கு வர்றோம்? நம்ம சந்தோசத்துக்கும், பிகருக்காகவும்தானே!

நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டாங்களா! ஒலகம் உருப்படாதுய்யா!

வேலைக்குப்  போகும்  பெண்மணி  
அடிச்சிப்பிடிச்சி ஆபீசுக்கு வந்தாச்சு! ஸ்ஸ்ஸ்...இனிமேத்தான் ரெஸ்டு !!

வரவர இந்த மேனேஜர் பார்வையே சரி இல்லையே!

இவங்க குடுக்கற சம்பளத்துக்கு... டயத்துக்கு வரணுமாமே? ஜோக்குப்பா!!

புது மணப்பெண்
சொர்க்கமும் (கணவன்) நரகமும் (மாமியார்)  ரொம்ப கிட்டகிட்டே  இருக்கே! அதெப்படி?

புது மாப்பிள்ளை 
முப்பது நாளுக்குள்ளேயே,  நல்லவன் வேஷம் உசிர வாங்குதேய்யா!

பழம்"பெரும்" நடிகையின் பரம ரசிகன் 
உச்சியிலே இருந்தப்ப நச்சுன்னு இருந்தீங்க! இப்ப, கேப்பாரில்லாத பீப்பாயா!? :((((

சினிமா இயக்குனர் 
நடுநிசி: தியேட்டரில் தலைப் பிரட்டை, பதிவுலகில் சுறா!

மைனா: பட்ஜெட் வெங்காய வெடி, பாதிப்பு அணுகுண்டு!

சினிமாப் பைத்தியம் 
நாலு நாளாச்சு சாப்பிட்டு! நாப்பது வாட்டி எந்திரன் பாத்தாச்சி!

பிரபல  கவிஞர் 
உடைச்சி மடிச்சி எழுதினாலே,  உயிரை விடறாங்களே கவிதைன்னு!

விக்கல்  முனகல் சேக்கலன்னா , விக்க முடியாதே ஊருக்குள்ளே!

அம்மா ஒப்பாரியை சுத்தமா எழுதினா, அமர்க்களமான கவிதைங்கறாங்க?!

சங்கத் தமிழையும் சென்னைத் தமிழாய் சரிபண்ணாத்தான் சினிமாக் கவிஞன்?!

பிரபல பாடகி 
கீச்சுக்குரலாலேயே பிரபலமாயிட்டமே, குரல் நல்லாருந்தா... கல்யாணமே ஆயிருக்குமோ?

பள்ளி ஆசிரியர்
நீ  ஜென்மத்துக்கும் உருப்படமாட்ட ; பன்றி  மேய்க்கத்தான் லாயக்கு!
(அவிங்க  வாத்தி  அவரைத் திட்டுனது, மனதில் இன்றும் பசுமையாய்! என்னா ஒரு தீர்க்கதரிசனம் பாருங்க!?)

மனைவி (சமைச்சுப் போட்டே சலித்துப் போனவர்)
உங்களுக்கு சாப்பாடு தான் முக்கியம்னா, சமையல்காரியைக்  கட்டிக்கிட்டுருக்கணும்!
 
புதிய பதிவர்
சரக்கில்லாமலே பிரபலமாயிட்டாங்களே?  லேட்டா வந்தது நம்ம தப்புய்யா!

இப்படியெல்லாம் எழுதறாங்களே, மக்காஸ் ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

தமிழ்திரட்டி 'வெப்மாஸ்டரை'   சிங்கப்பூர் அனுப்பலாமா ? பணத்துக்கு  வழியென்ன ?! 

போட்டோ, மொபைல், முகவரிகூட  போட்டாச்சு! ஆத்தா நான் பிரபலமாயிட்டேன் !!!!!!
  
பிரபல பதிவர்
வாரத்துக்கு மூணு பதிவுக்கு ஒப்பேத்தலாம், மீதிக்கு எங்கய்யா போறது?
(சரக்கு, சரக்குன்னு கூவற கூட்டத்துக்குச் சவுக்கடி!)

உருப்படியா ஒண்ணும்  தெரியாதவனெல்லாம்  பதிவெழுத ஆரம்பிச்சிட்டான்? வெளங்கிடும்*@!

துட்டுதான் இல்ல, புத்தியுமா...?  'வெப்மாஸ்டரை' கவனிச்சா வேலைக்காகுமா?!

வலைச்சரமே  சீந்தலையாம், தமிழ்மணத்துல தாதா ஆவணுமாம்?  உட்ருவமா?

ரசிகர்கள் மாநாடா!? இருக்கறது ஒருத்தன்,  மீதியெல்லாம் பினாமி (நானேதான்)!
(போடாங்...#$!@&*! ஐடியா குடுத்த அல்லக்கையை அடித்து நொறுக்குகிறார்)!

நம்ம ஜால்ராக் கூட்டத்துக்கு இலவசமா மொபைல் குடுத்துட்டோமில்ல?

ஓட்டு கம்மியாவுதே! talktime  காலின்னு சொல்றாங்க பசங்க!?
(யோவ், கணக்கு...! எல்லாத்துக்கும் ரீசார்ஜ்  பண்ணித்தொலைய்யா! பேசனது,  மாசத்துக்கு முன்னூறு ரூவா, இப்ப ஐநூறுக்கு அடிபோடறானுவளே...? இது கட்டுப்படியாகாது... புதுப் பசங்கள புடிக்கணும்! அடுத்த வாரம் Campus Recruitment  ஏற்பாடு பண்ணுய்யா !!!)

ஹூம்! சரக்குக்குத் தலைப்பு தேடின காலமெல்லாம் போச்சே!

கார சாரமான பதிவு(ன்னு தெரியாமல்) போட்டவர்?!
பின்னூட்டம் போடுங்கண்ணா,  பின்னை  உருவிட்டுக்  கைக்குண்டை  வீசுறாங்களேய்யா !

{போன வாரம் (11/03/2011), இப்படித்தான், வீதியிலே (தன் பதிவிலேயே) நடக்கற ரணகளத்தை எட்டா(வ)து மாடியிலிருந்து பயந்து பயந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார், ஒரு பிரபல பதிவர்!}

பதிவுலக நோக்கர் (பெரியவர் சீனா மாதிரி!) 
மெட்டுக்குப் பாட்டு, ஹிட்டுக்குத் தலைப்பு! மேட்டரா!? அப்படீண்ணா?

தலைப்பும் மேட்டரும் ஒத்துப் போகலை, தனிக்குடித்தனம்,  நிர்ப்பந்தம்!

பெயரில் மட்டுமே அப்பாவா, கூடவே வச்சுக்கப் பாருங்கய்யா!

அப்பாடா! நான் நிறுத்திட்டேங்க, இனி நீங்க கோதாவிலே இறங்கலாம்! தட்டி உடுங்க கற்பனைக் குதிரையை!  எனக்கும் சொல்லுங்க...கேக்கறேன்!

அது சரி, ஜோக்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு (நீங்க சொல்றீங்களோ இல்லியோ, நம்பளே நைசா ஒரு பிட்டைப் போட்டு வைப்போம்...)! ஆனா, இந்தப் "PASSWORD புதையல்" என்னது? ஒண்ணும்  புரியலியேண்ணு   கேக்கறவங்க,   இந்தப் பதிவின் முன்னோடியான (முதல் பகுதி) PASSWORD புதையல்! வாங்க... வாங்க... அள்ளிட்டுப் போங்க!  படிங்க, எல்லாம்  விளங்கும்!

- மனம் திறந்து ...(மதி).


பின் குறிப்பு:
  1. உறுதிமொழி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே பகிரப் பட்டது. யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதியது இல்லை, இல்லை, இல்லவே இல்லை!  இந்தப் பதிவில்  உண்மை இருக்க வாய்ப்பே இல்லை! அப்படி என்னையும் மீறி {இப்பத்தான் எல்லாத்துலயும் கலப்படம் ஜாஸ்தியாப் போச்சுங்களே, சுத்தமான பொய் கூட எல்லா எடத்துலயும் கிடைக்கறதில்லீங்க :(((  நல்ல காலம் தேர்தல் வந்துடுச்சி, இப்பக் கொஞ்சம் சுலபமாக்  கிடைக்கலாம் ! :))) எங்க, அவங்க கூட இப்பல்லாம் ஒருத்தரை ஒருத்தர் சகட்டுமேனிக்குத் திட்டி உண்மை பேசறதுலேயே நேரத்தை வீணாக்கிடறாங்க! :))) } எங்காவது உண்மை தென்பட்டால் அதுக்கு நான் நிச்சயமா பொறுப்பு இல்லீங்கோ!! இது நான் வணங்கும் தமிழ்மணம் மீது சத்தியம்!!!
  2. உதற(ல்)மொழி : இவ்வளவு சொல்லியும் நம்பாம, யாராவது நம்பளை மிரட்டவோ, பயமுறுத்தவோ, துன்புறுத்தவோ, வருந்த வைக்கவோ  முயற்சி பண்ணா, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்!! இந்த வலைத்தளத்தையே மூடிட்டு, பழையபடி மாடு மேய்க்கப் போயிடுவேன்! ஆமா...சொல்லிப்புட்டேன்!!  ஜாக்ரதை!!!
  3. மறைமொழி : (ரகசியம்...) அப்புறம் பொழைப்புக்கு என்ன பண்ணுவேனா? ஹையோ, ஹையோ! நம்பளை யாருன்னு நெனச்சீங்க? தனிக்கட்சி ஆரம்பிச்சி, பத்து சீட்டு கேக்கப்போறேங்க! இப்ப உட்டுட்டா, இன்னும் அஞ்சு வருஷம் வயித்தைக் கழுவறது எப்பிடி? 

8 comments:

Yoga.s.FR said...

#இவ்வளவு சொல்லியும் நம்பாம, யாராவது நம்பளை மிரட்டவோ, பயமுறுத்தவோ, துன்புறுத்தவோ, வருந்த வைக்கவோ முயற்சி பண்ணா, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்!! இந்த வலைத்தளத்தையே மூடிட்டு, பழையபடி "மாடு" மேய்க்கப் போயிடுவேன்! ஆமா...சொல்லிப்புட்டேன்!! ஜாக்ரதை!!! பள்ளி ஆசிரியர்;
நீ ஜென்மத்துக்கும் உருப்படமாட்ட ; "பண்ணி" மேய்க்கத்தான் லாயக்கு!எது கரீக்டு?மாடா?பன்னியா???(மேய்க்கப் போப் போறீங்க?)

மனம் திறந்து... (மதி) said...

Yoga.s.FR: வாங்க ...வணக்கம், வருகைக்கு நன்றி! ஹலோ, என்னங்க அநியாயத்துக்கு உஷாரா இருக்கீங்க! இப்படிக் கையும் களவுமாப் புடிப்பீங்கன்னு எதிர்பார்க்கலையே நானு! நமக்கு இனிமே 'மாடு' தாங்க, கொஞ்சம் படிச்சிட்டு காலேஜுக்கு வாத்தியாரா வந்திட்டோமில்ல!:)))

Paavai said...

Ivvalo bayam irukkaravaru edhukku indha vambukku poganum?????

மனம் திறந்து... (மதி) said...

Paavai: முடிவு பண்ணிட்டேங்க...! இனிமே பின் குறிப்பு மட்டும் தான் எழுதறதுன்னு! ஏன்னா, அதைத்தானே மக்கள் உன்னிப்பா படிக்கிறாங்க!

தக்குடு said...

கற்பனை குதிரை சும்மா பிச்சுகிட்டு ஓடுது போலருக்கு!!( V K ராமசாமி குதிரை மாதிரி!!)...:)) பள்ளி ஆசிரியர் ஜோக், புதிய பதிவர், பிரபல பதிவர் (ஆமா! இது யாரை பத்தி??..;P),புது மாப்பிள்ளை எல்லாம் மிகவும் ரசித்தேன்.

மனம் திறந்து... (மதி) said...

தக்குடு: ரொம்ப நன்றி ! இப்பல்லாம் ஜோக் (நிஜமாவே ஜோக்!) எழுதினா இளவட்டத்திலே பாராட்டும் அங்கீகாரமும் பெறுவது கடினம்! அந்த வகையில், கலக்கும் காமெடி நடையைக் கரைச்சுக் குடிச்ச தம்பி தக்குடுவின் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது!

வெட்டிப்பையன்...! said...

பிரபலங்கள் சில பேர் உங்க ஊட்டுக்கு ஆட்டோ அனுப்ப போறாங்கனு நினைக்குறேன் ...! எதுக்கும் சாக்கிரதையா இருந்துக்கோங்க . உயில் எதாவது எழுதி எழுதுற ஐடியா இருந்தா, நம்ம பேர்ல எழுதி வைங்க .என்ன இருந்தாலும் உங்க தோஸ்த் இல்லையா நான்...!

:-)

மனம் திறந்து... (மதி) said...

வெட்டிப்பையன்...!: நல்லவேளை ... ஞாபகப்படுத்தினீங்க! எலும்பும் தோலுமாயிட்ட ரெண்டு எருதுகள், ஒரு நாளைக்கு மூணு லிட்டர் (கோமியத்தையும் சேர்த்து) குடுக்குற காராம் பசு, ஒண்ணரைச் சக்கரம் கொண்ட பழைய மாட்டு வண்டி இதெல்லாம் உங்க பேர்லதாங்க எழுதி வச்சிருக்கேன்! உங்களை மறப்பேனா? :)))

Post a Comment

ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!