Sunday, January 30, 2011

வாழ்க்கை... ஒரு பார்வை!


உலகமே உங்கள் கையில்! ஆனால் நீங்கள்...?

உலகை உங்கள் கையினில் இன்று
ஒரு கைபேசி தந்திடும் நன்று!

ஆனால்
...
உள்மனம் மட்டும்  வசப்பட வில்லை
உள்ளும் புறமும் ஆயிரம் தொல்லை!
                            
வளர்ந்தது விஞ்ஞானம் குறுகியது உலகம்
வறண்டது மெய்ஞ்ஞானம் குறுகியது உள்ளகம்!

முள்ளும்
மலரும் உறவின் முகங்கள்
முதிர்வும் நெகிழ்வும் உதவும் கரங்கள்!

உற்ற
 நண்பர்கள்  உறவினும்  மேலோர்
உணர்ந்து தெளிந்தவர் உலகை வென்றோர்!


பணமெது? மனமெது? வீடெது? நாடெது?
பொய்யெது? மெய்யெது? சுகமெது? வரமெது?

அன்று,
மனமெனும் தலைக்குப் பணம் வெறும் அடியாள்
இன்று, பணம் நாட்டாமை மனம் வெறும் ஆமை!


அன்று, நாட்டைத் தாங்கிப் பிடித்த வேர்  வீடு
இன்று, நாடுகள் அறைகள்...இது நாட்டார் வீடு!


என்னிடம் குறைகளா...!? பொய்! பொய்! இது பொய்!
மனிதர்கள் மோசம்...! இது மெய், இது மெய்!

அடுத்தவர் நம்மைப் புகழ்ந்தால்
அது சுகம்,
படுத்த உடனே உறங்கினால் அது வரம்!

செல்வமும்
சுகமும்  பயணச் சீட்டே
பயணமே  அதுவெனப் பார்த்தால்  வேட்டே!

வாழ்க்கை
என்பது வாய்ப்பது அன்று
வலிந்து தெரிந்து  சுவைப்பது இன்று!

உடல்
ஒரு கருவி, ஊடகம் தானே?
உள்ளம் சொல்லும்: எஜமான் நானே!

உடலை வளர்த்தோர் உயிர் வளர்த்தாரே,
 
உள்ளே வளர்ந்தோர் உலகளந்தாரே!


மனமும் மதியுமே ஆக்கும் கருவிகள்
மானுட நேயம் வார்க்கும் அருவிகள்!

உயிருடன்
இருப்பது மட்டுமே வாழ்க்கையா?
உவந்து  கலந்து  உயர்வது  நேர்த்தியா?

ஒவ்வொரு
நாளும் உறங்கும் முன்பு
ஒரே
 ஒரு  கேள்வி  உதயமாகட்டும்!

இன்று நாம் வாழ்ந்தோமா
?
எப்போ? எப்படி? எவ்வளவு நேரம்?

- மனம் திறந்து...(மதி)

பின் குறிப்பு:
  1. அவையடக்க அறிவிப்பு: நான் கவிஞன் அல்ல!
  2. அவையடக்கம்:- கொதித்து எழுகின்ற அவையினரை அடக்க முயற்சி செய்வது!?

19 comments:

Porkodi (பொற்கொடி) said...

ஒவ்வொரு நாளும் உறங்கும் முன்பு
ஒரே ஒரு கேள்வி உதயமாகட்டும்!

yen? yen indha veri?

Anonymous said...

nice one!!

Philosophy Prabhakaran said...

// நான் கவிஞன் அல்ல! //

உங்க நேர்மையை பாராட்டுகிறேன்...

உங்கள் பதிவுகளை இன்ட்லியில் இணைக்கவும்...

அப்பாவி தங்கமணி said...

ahaa...naan thaan late attendance pola irukke? kalakkareenga...

எல் கே said...

/ஒவ்வொரு நாளும் உறங்கும் முன்பு
ஒரே ஒரு கேள்வி உதயமாகட்டும்!//

பதில் யாரு சொல்வாங்க ?? நீங்களா ?

எல் கே said...

//பத்தாயிரம் கோடி பதுக்கினால் அது சுகம்,//

arasiyal

மனம் திறந்து... (மதி) said...

பொற்கொடி: இந்தாங்க வடை, பிடிங்க!
//yen? yen indha veri? //
உங்களுக்கு இருக்கிற கொலை வெறியில 1% கூட எனக்கு இல்லேன்னு உலகத்துக்கே தெரியுமே...!

Anony: Thank you!

PP: // உங்க நேர்மையை பாராட்டுகிறேன்...//
நன்றிங்க! இது உண்மைங்க...சால்ஜாப்பு இல்லை! உண்மையைச் சொல்லப் போனால் நான் ஆங்கில இலக்கியம் படித்தவன்!
என் தளத்தை இண்ட்லியில் இணைத்து விட்டேன், நன்றி!

ATM: வாங்க...வணக்கம். நன்றிங்க!

LK: ஓ...தாராளமா பதில் சொல்றேன்! தினமும் படுக்கறத்துக்கு முன்னாடி எங்க வீட்டுப் பக்கம் வாங்க...!
//arasiyal// காலம் கடந்து நிக்கறா மாதிரி மாத்தி அமைச்சிட்டேங்க, நன்றி!

Paavai said...

Romba azhaga ezhudiirukkeenga. After reading your humorous comments I was expecting plenty of humour in your posts... serious writingum kai vanda kalai thaan pola ungalukku.

Sh... said...

நன்று.

மனம் திறந்து... (மதி) said...

பாவை: வாங்க. பாராட்டுக்கு நன்றி. நகைச்சுவை: ரசிப்பது சுலபம், பேசுவது கொஞ்சம் கடினம், எழுதுவது மிகவும் கடினம்...பார்ப்போம்...என்ன செய்யலாம் என்று!

Sh...: நன்றிங்க!

sriram said...

ம தி மதி..
சாரி வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிடிச்சு.
பின் குறிப்புகள் ரொம்ப பிடிச்சிருக்கு, குறிப்பா ரெண்டாவது..
கவுஜ எழுத மாட்டேன்னு நீங்க ப்ராமிஸ் பண்ணா கடைப் பக்கம் அடிக்கடி வர்றேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

இராஜராஜேஸ்வரி said...

வளர்ந்தது விஞ்ஞானம் குறுகியது உலகம்
வறண்டது மெய்ஞ்ஞானம் குறுகியது உள்ளகம்!
very true

மனம் திறந்து... (மதி) said...

sriram: வாங்க...வாங்க...வருகைக்கு நன்றி! நீங்க சொல்றதைப் பாத்தா இனிமே பின் குறிப்பை முதல்லே எழுதிட்டு, அப்புறம் தேவைப்பட்டா எதாவது மேட்டரும் எழுதலாம் போலிருக்கே! :))) ஹா..ஹா...ஹா...!
நான் கவிதை எழுதக் கூடாது (மக்கள் நலன் கருதி) ன்னு சொல்லி இருக்கீங்க! நான் சொன்னது என்னவோ "நான் கவிஞன் இல்லேன்னு" மட்டும் தான்; கடைசீலே நான் எழுதினது கவிதை இல்லேண்ணும் ஆயிப்போச்சே!! ....:(((( ?

இராஜராஜேஸ்வரி: வாங்க...வாங்க...வருகைக்கு நன்றி! நம்ம ஆதங்கத்தைப் பகிர்ந்துகிட்டீங்களே....அதுக்கும் நன்றிங்க!

ம.தி.சுதா said...

அருமையான தலைப்பில் உங்க புளொக் அமைந்திருக்கு.. வரிகளும் அருமைங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

மனம் திறந்து... (மதி) said...

ம.தி.சுதா: வாங்க...வருகைக்கு நன்றி! "மதி" யும் "ம.தி" யும் மனமொத்துப் போவதில் மகிழ்ச்சியே தவிர ஆச்சரியம் இல்லை, அல்லவா!

Dubukku said...

//மனமும் மதியுமே ஆக்கும் கருவிகள்
மானுட நேயம் வார்க்கும் அருவிகள்!//

மனம்...மதி......மனம் திறந்து மதி....அடடா அடடா...கலக்குறீங்க

மனம் திறந்து... (மதி) said...

Dubukku: ஆஹா! கரெக்டா பாயிண்டைப் புடிச்சிட்டீங்க பாருங்க! ...:)))))))))))))) தலைவரா...கொக்கா! நன்றிங்க!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

மனம் திறந்து... (மதி) said...

அருணா: வாங்க...வணக்கம், நன்றி! இந்தாங்க, பிடிங்க உங்களுக்கு ஒரு பூங்கொத்து! என் வலைத்தளத்துக்கு வந்தமைக்கு!

Post a Comment

ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!