முதல் பகுதியைப் படிக்காம, தப்பித் தவறி நேரா இங்க வந்துட்டவங்க இங்கே சொடுக்குங்க: அஞ்சாநெஞ்சனின் அதிரடி வியூகம்! மருத்துவர், கேப்டன், சிங்கம், ஆற்காட்டார் மற்றும்...?
மத்தவங்க வாங்க! வாங்க! அந்த மூத்த தலைவர் அப்படி என்ன சொன்னாரு அஞ்சாநெஞ்சனே அதிர்ச்சி அடையற மாதிரின்னு தானே கேக்கறீங்க! அவரு அஞ்சாநெஞ்சனை மாத்திரம் இல்லை, உங்களையும் என்னையும் சேத்தே ஏமாத்திட்டாருங்க! அவர் சொன்னது இதாங்க:
"அரசியலுக்கும், பத்திரிகை உலகத்துக்கும் கொஞ்சம்கூடத் தொடர்பில்லாத, இந்த மனம்திறந்து...(மதி) ஏப்ரல் முதல் தேதி காலங்காத்தாலே இப்படியொரு அதிபுத்திசாலித் தனமான பதிவு போட்டா, நீங்க:
- அதைப் படிச்சது முதல் தப்பு!
- நம்பினது ரெண்டாவது தப்பு!!
- இங்கே வந்து தொடர்ந்து படிச்சது மூணாவது தப்பு!!!
நம்பற மாதிரிதானேங்க எழுதியிருந்தாருன்னு சொல்ல வரீங்களா? ஐயோ, அங்கே தானேங்க அவர் ஜெயிச்சிட்டாரு!
ஆனாலும், ஒரு வகையிலே சந்தோஷப் படறேங்க! கிட்டத்தட்ட 250 பேருக்கு மேல் வந்தாலும், யாரும் அவரைப் பாராட்டல பாருங்க! அது மட்டுமில்லையே, 8 பேருக்கு மேல அவருக்கு ஓட்டும் போடலையே! யாருக்கு ஓட்டுப் போடணும், யாருக்குப் போடக் கூடாதுன்னு ரொம்பத் தெளிவா இருக்கீங்க பாருங்க...இதை ...இதை ...இதைத்தான் எதிர் பார்த்தேன் உங்களிடம்...! இது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்குங்க! இவ்வளவு தெளிவா இருக்கிற உங்களை எல்லாம் நம்பித்தானேங்க நாங்க பொழப்பை நடத்துறோம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு! ஓங்கி உயர்க தமிழர் புகழும், வாழ்வும்! வணக்கம்... வணக்கம்... வணக்கம்!"
ஆனாலும், ஒரு வகையிலே சந்தோஷப் படறேங்க! கிட்டத்தட்ட 250 பேருக்கு மேல் வந்தாலும், யாரும் அவரைப் பாராட்டல பாருங்க! அது மட்டுமில்லையே, 8 பேருக்கு மேல அவருக்கு ஓட்டும் போடலையே! யாருக்கு ஓட்டுப் போடணும், யாருக்குப் போடக் கூடாதுன்னு ரொம்பத் தெளிவா இருக்கீங்க பாருங்க...இதை ...இதை ...இதைத்தான் எதிர் பார்த்தேன் உங்களிடம்...! இது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்குங்க! இவ்வளவு தெளிவா இருக்கிற உங்களை எல்லாம் நம்பித்தானேங்க நாங்க பொழப்பை நடத்துறோம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு! ஓங்கி உயர்க தமிழர் புகழும், வாழ்வும்! வணக்கம்... வணக்கம்... வணக்கம்!"
அவர் கிடக்கறாரு, விட்டுத் தள்ளுங்க ...! நம்ம விஷயத்துக்கு வருவோம்! இந்த ஏப்ரல் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு என்னுடன் ஒத்துழைத்த உங்க எல்லாருக்கும் நன்றிங்க! முழுக்க முழுக்கக் கற்பனையாகவே இருந்தாலும், கொஞ்சம் நம்பகத் தன்மை வரும்படி மண்டையைக் கொடைஞ்சு எழுதினது, அவ்வளவுதான்! எனக்குத் தெரிஞ்ச கொஞ்சூண்டு அரசியல் இதுக்குக் கைகுடுத்தது என்னவோ உண்மைதான்! ஆனா, நீங்க கோவிச்சுக்காதீங்க.... இது சும்மா விளையாட்டு தானுங்களே!
இனி, நம் கடையில் வியாபாரம் தொடரும், இயல்பாக! நீங்களும் நம்பிக்கையோடு வந்து, நல்ல பொருளை வாங்கிய மனநிறைவோடு திரும்பிப் போகலாம், வழக்கம் போல!
மீண்டும் நன்றி, வணக்கம்!
- மனம்திறந்து ...(மதி).
பின் குறிப்பு:
- இந்த விளையாட்டால் யாராவது பாதிக்கப் பட்டிருந்தாலோ அல்லது உண்மையிலேயே மனம் வருந்தியிருந்தாலோ அவர்களிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! தயவு செய்து மன்னித்து விடுங்கள்!
- இது, வருமான வரியெல்லாம் போக, கையில் கிடைத்த கால்வாசிச் சம்பளத்தை வைத்து இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் எப்படி சமாளிப்பது என்ற என் போன்ற பெரும்பாலோரின் சோகத்தையும், கவலையையும் கொஞ்சம் மறக்க உதவிய விளையாட்டே தவிற வேறொன்றுமில்லை, இல்லை, இல்லவே இல்லை!
- நீங்களும் நல்லவர் தானே, அப்போ எல்லாம் சரியாப் போச்சுன்னு சொல்லி, இவரை மாதிரி கொஞ்சம் வாய்விட்டு சிரிங்க பாக்கலாம்! அட... அட.... ஹை ... ஹைய்யா ...சிரிங்க... சிரிங்க...சிரிக்கறீங்க... சிரிச்சிட்டீங்களே!!! :)))
11 comments:
ம்..ம்.. நடத்துங்க.. நடத்துங்க...
வேடந்தாங்கல் - கருன்: வாங்க நண்பரே! காலைலயும் இதைத்தான் சொன்னீங்க! இப்பவும் இதைத்தான் சொல்றீங்க! இருங்க,இருங்க...ஒரு நாள் எல்லாத்துக்குமா சேத்து வச்சுக்கிறேன்னு மிரட்டற மாதிரியே இருக்குங்க! :)))
Mathi
இதற்கும் ஒட்டு போட்டாச்சு.
ஃஃஃஃஃஉண்மையிலேயே மனம் வருந்தியிருந்தாலோ அவர்களிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! தயவு செய்து மன்னித்து விடுங்கள்! ஃஃஃஃ
ஏங்க... நானு வருந்தவே இல்லியே... ஹ..ஹ...ஹ..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
Vasagan: வாங்க, வாங்க! நன்றி! :)))
மதுரை சரவணன்: வாங்க, வருகைக்கு நன்றி!
ம.தி.சுதா: சகோ! நீங்கள் வருந்துகிற மாதிரி நான் ஏதாவது செய்வேனா? :-)))
சிங்கம் ஒன்று புறப்பட்டதே ...!
ஒரு ரெண்டு வாரம் ஆணி புடுங்கரதுல பிஸி ஆய்ட்டேன் , அதுக்குள்ளார இத்தனை பதிவா ...?
வெட்டிப்பையன்...! : வாங்க நண்பரே, நீங்க கொஞ்சம் ஒப்பன் டைப்பு தானே? பதிவு சரியில்லைன்னா நேரடியாவே சொல்லிடுவீங்களே! அப்புறம் எதுக்கு, மறைமுகமா உங்களை நாட்டை விட்டு வெளியேத்தணும், காட்டுக்கு அனுப்பணும்கிற மாதிரிப் பேசறீங்க? ஹா...ஹா...ஹா!
வெட்டிப்பையன்...! : "இப்படிக் கடிச்சிக் குதறிட்டீங்களே, ஏன்" னு கேளுங்க...அது ஞாயம்! அதை விட்டுட்டு... நீங்க சிங்கம், புலின்னு எல்லாம் சொல்லி நம்பளையே பயமுறுத்துறீங்களே, இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை? ஹி..ஹி...!
Post a Comment
ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!