ஒரு விதத்தில் பார்த்தால், Abraham Maslow சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை தான் தாத்தா, பாட்டி!
(Image Courtesy: http://en.wikipedia.org)
என்னை நானே அறியாத என் குழந்தைப் பருவம்!
உலகை நான் புரிந்து கொள்ளவில்லை என்று உணராமல் உலகையே எதிர்க்கும், பழிக்கும், உதாசீனப் படுத்தும் இளமைப் பருவம்!
எதற்காக வாழ்கிறேன், எங்கே போகிறேன், ஏன் இப்படி எதன் பின்னாடியோ எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கூடப் பார்க்க நேரமில்லாமலே முடிந்து விடுகின்ற குடும்பத் தலைவன், தலைவி வாழ்க்கை!
என் பிள்ளைகளே கூட என்னைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப் படுத்தி, ஒதுக்கி வைத்த போதும்,
அக்கம் பக்கத்தாரும் கூட ‘நச்சரிக்கும் பெருசுகள்’ என்று தவிர்த்து விடும் போதும்,
என் வலிவின்மை, வனப்பின்மை, பொருளின்மை எல்லாவற்றையும் துச்சமாக்கித் தூரத் தள்ளிவைத்து, எல்லாம் தெரிந்த குழந்தையாய் என்னை மாற்றி விட்டு, எதுவும் தெரியாத என் பேரக் குழந்தை என்னிடம் அளவு கடந்த அன்பு காட்டுகிறதே;
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும் என்று, அதன் வாயிலை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு, இங்கேயே ஒரு "virtual reality show" வாக வழங்கி, வாழ்வின் சுமையான இறுதிக் காலத்தை சுவைக்க வைக்கிறதே அந்தப் பிஞ்சு உள்ளம்;
இது வரை இல்லாத அளவுக்கு, எனக்கே ஆச்சர்யம் தரும் வகையில், நான் எவ்வளவு நல்லவனாக இருக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லி என்னையே மாற்றி விடுகிறதே அந்தப் பேரக் குழந்தை!
அதனால் தான் (மீண்டும்) சொல்கிறேன், தாத்தா பாட்டி நிலை "உச்சக்கட்ட தேவைகள்" பூர்த்தி அடையும் நிலை என்று!
- மனம் திறந்து... (
மதி)
.
பின் குறிப்பு: இந்தப் பதிவு உருவாகக் காரணமான டுபுக்காரின் பதிவை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்!
25 comments:
//எல்லாம் தெரிந்த குழந்தையாய் என்னை மாற்றி விட்டு, எதுவும் தெரியாத என் பேரக் குழந்தை என்னிடம் அளவு கடந்த அன்பு காட்டுகிறதே; /
இது போதுமே
nice
எல் கே: ஆமாம்...அது போதும்!:)))
ராம்ஜி_யாஹூ : வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க!
படித்தேன். மகிழ்ந்தேன். நீங்கள் சொல்லுவது யாவும் நூற்றுக்கு நூறு உண்மை, என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் நான்.
துபாயிலிருக்கும் என் பேரனோ பேத்தியோ வாரம் ஒருமுறையாவது என்னுடன் பேசாமல் போனால் எனக்கு அழுகை வந்து விடும். அவர்களுக்கும் அப்படியே.
வருஷம் ஒரு முறை வருவார்கள். பெரும்பாலும் என்னுடன் தான் பழகுவார்கள், பேசுவார்கள், கதை கேட்பார்கள், கட்டிப் பிடிப்பார்கள், என் தொந்தியில் தலை வைத்துப் படுப்பார்கள்.
அந்த நம் பேரனையோ பேத்தியையோ பார்ப்பதோ, பழகுவதோ, பேசுவதோ, அவர்களின் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்வதோ ”யாழ் இனிது குழலினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்” என்ற வள்ளுவரின் வாக்கு போல வெகு அழகானது தான்.
அந்தக் குறளில் வரும் “தம்மக்கள்” என்ற சொல் மட்டும் எனக்கு மிகவும் பிடித்தது.
பிறர் குழந்தையைக் கொஞ்சுவது இன்பம்!
நம் குழந்தையைக் கொஞ்சுவது பேரின்பம்.
தன் வாரிசின் குழந்தையைக் கொஞ்சுவது Abraham Maslow சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை.
I fully agree with you.
பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். .
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும் என்று, அதன் வாயிலை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு, இங்கேயே ஒரு "virtual reality show" வாக வழங்கி வாழ்வின் சுமையான இறுதிக் காலத்தை சுவைக்க வைக்கிறதே அந்தப் பிஞ்சு உள்ளம்;//
வாழ்வை சுவை ஆக்குவது பிஞ்சு குழந்தைகள்தான் உண்மை.
உண்மைதான்! இந்த நிலையில் நானும் இருக்கிறேன்! கள்ளங்கபடில்லா பிஞ்சு முகத்தின் பாசத்தையும் நேசத்தையும் அனுபவித்து, ரசித்து, கடந்து போன் பசுமையும் இளமையும் திரும்ப வந்து என்னை உற்சாகப்படுத்துவதை உணர்கிறேன்!!
பதிவு மிக அருமை!
பூங்கொத்து!
அநுபவித்து எழுதியிருக்கிறீர்கள். என் பதிவையும் பார்த்து சொல்லுங்களேன்.
http://vedivaal.blogspot.com/2010/03/blog-post.html
சகாதேவன்
//என் வலிவின்மை, வனப்பின்மை, பொருளின்மை எல்லாவற்றையும் துச்சமாக்கித் தூரத் தள்ளிவைத்து, எல்லாம் தெரிந்த குழந்தையாய் என்னை மாற்றி விட்டு, எதுவும் தெரியாத என் பேரக் குழந்தை என்னிடம் அளவு கடந்த அன்பு காட்டுகிறதே; //
மதி அற்புதமாய் எழுதியிருக்கிறீர்கள். நெஞ்சைத் தொட்ட வரிகள். உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
இதுவரை நீங்கள் போட்டதிலேயே மிகவும் பிடித்த பதிவு .
//Abraham Maslow சொன்ன Hierarchy of Needs //
லெவல் காட்டுறீங்க :))
வை.கோ: வாங்க...வருகைக்கும் மனமார்ந்த பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிங்க!
//பிறர் குழந்தையைக் கொஞ்சுவது இன்பம்!
நம் குழந்தையைக் கொஞ்சுவது பேரின்பம்.
தன் வாரிசின் குழந்தையைக் கொஞ்சுவது Abraham Maslow சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை.//
பின்னிட்டீங்கய்யா! :)))))))))))))))
கோமதி அரசு: வாங்க...வருகைக்கும் சுவை கூட்டியதுக்கும் நன்றி!
மனோ சாமிநாதன்: வாங்க...வருகைக்கும், பகிர்தலுக்கும், பாராட்டுக்கும் நன்றி!
அருணா: பதிவுக்கே மணம் சேர்த்ததுக்கு நன்றிங்க, டீச்சர்!
சகாதேவன்: வாங்க...வருகைக்கும், பகிர்தலுக்கும், பாராட்டுக்கும் நன்றி!
Dubukku: //மதி அற்புதமாய் எழுதியிருக்கிறீர்கள். நெஞ்சைத் தொட்ட வரிகள். உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
இதுவரை நீங்கள் போட்டதிலேயே மிகவும் பிடித்த பதிவு.//
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தலைவரே! பெரிய விருது வாங்கின மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது எனக்கு! மிக்க நன்றிங்க! :)))
// "Abraham Maslow சொன்ன Hierarchy of Needs " ...லெவல் காட்டுறீங்க :)) //
அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! அப்படியே இருந்தாலும், அந்த லெவலுக்கு என்னை உசுப்பேத்தி விட்டது உங்க பதிவு தாங்க! :))))))
தாத்தா பாட்டி நிலை "உச்சக்கட்ட தேவைகள்" பூர்த்தி அடையும் நிலை என்று!
அனுபவம் பேசிகிறது.
படித்தேன்! ரசித்தேன்! தேன்! தேன்!...:) நிதர்சனமான உண்மைகளை அழகாய் வருடியது உங்கள் வரிகள்.
சார்வாள், எம்பி எம்பி ஒரு MBA படிச்ச மாதிதிதிரி இருக்கே!!! மாஸ்லோ தியரி ஆர்கனைஷேஷனல் பிஹேவியர்-ல வரும்...:)
இராஜராஜேஸ்வரி: ஆமாங்க, அனுபவம் பேசுகிறது! :)))
தக்குடு: //படித்தேன்! ரசித்தேன்! தேன்! தேன்!...:) நிதர்சனமான உண்மைகளை அழகாய் வருடியது உங்கள் வரிகள்.//
என் இதயத்தை வருடின, இந்த வரிகள்! மிக்க நன்றி!
//சார்வாள், எம்பி எம்பி ஒரு MBA படிச்ச மாதிரி இருக்கே!//
கரெக்டாக் கண்டுபிடிச்சிட்டியேப்பா! ஆமாம் முக்கி முக்கி , எம்பி எம்பித் தான் MBA படித்தேன்! இந்த விஷயத்தில நானும் உன் கட்சி தான், தம்பி! :)))))
ஒர 40, 50 வருசம் பின்னக்கு கொண்டு போய் வந்திருக்கீங்கள்....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
ம.தி.சுதா: பெரிய பாதிப்பு எதுவும் இல்லாம, பத்திரமா திரும்பி வந்துட்டீங்க இல்லே! அப்பாடா! நான் தப்பிச்சேன்...இல்லேன்னா நானில்லே யார் யாருக்கோ பதில் சொல்ல வேண்டி வந்திருக்கும்! :)))
இராஜராஜேஸ்வரி: ஒரு உண்மையான ரசிகராக, {பொறுப்புள்ள மாணாக்கி செய்ய மறந்து, விட்டுப் போன, வீட்டுவேலையை (home work) ஒரே மூச்சாய் உட்கார்ந்து, பொறுமையாகவும், அழகாகவும் செய்து முடிப்பது போல}, படிக்காமல் விட்டுப் போன என் எல்லாப் பதிவுகளையும் பொறுமையாகப் படித்துப் பார்த்து, அங்கங்கே தவறாமல் பின்னூட்டமும் போட்டு அசத்தி இருக்கிறீர்கள்! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது....மேன்மேலும் நல்ல பதிவுகள் தருவது மூலம் தானே! நிச்சயம் முயற்சிப்பேன்! மீண்டும் நன்றி! :)))))))))
//இது வரை இல்லாத அளவுக்கு, எனக்கே ஆச்சர்யம் தரும் வகையில், நான் எவ்வளவு நல்லவனாக இருக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லி என்னையே மாற்றி விடுகிறதே அந்தப் பேரக் குழந்தை! //
பேர குழந்தை என்று இல்லை மதி ,எந்த குழந்தை கூடவும், நாம் அவர்களுடன் காலத்தை கழிக்கும் போதும் இதே நினைவு தான் வருகிறது . நாம் எல்லாம் இப்போ (Hierarchy of Needs ) நாலாவது படி நிலையில் போராடி கொண்டு இருக்கிறோம் என நினைக்கிறேன்.
வெட்டிப்பையன்: மேலோட்டமாப் பார்த்தா நீங்க சொல்றது உண்மை தான். ஆனால், தாத்தாவுக்கான வயதும், பேரக் குழந்தையுடன் கொண்ட ரத்த, மரபணு, அடுத்த தலைமுறை சம்பந்தப்பட்ட நெருக்கமான உறவும் மற்ற எல்லாக் குழந்தைகளுடனும், அனைத்து வயதினருக்கும் இத்தகைய அனுபவங்கள் வாய்ப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கணிசமாகக் குறைத்து விடுகின்றனவே!
என் வலிவின்மை, வனப்பின்மை, பொருளின்மை எல்லாவற்றையும் துச்சமாக்கித் தூரத் தள்ளிவைத்து, எல்லாம் தெரிந்த குழந்தையாய் என்னை மாற்றி விட்டு, எதுவும் தெரியாத என் பேரக் குழந்தை என்னிடம் அளவு கடந்த அன்பு காட்டுகிறதே;
...Lovely.... !!!!
You have a nice blog. Following it. :-)
Chitra: வாங்க...வணக்கம், நன்றி!
சாக்லேட்டும், பூங்கொத்தும் குடுத்தீங்க, சரி...மகிழ்ச்சி!
உடனே, பெரம்பைக் கையில எடுத்திட்டு டீச்சர் மாதிரி எதுக்கு பயமுறுத்தறீங்க! :)))))))))
Your description of how the grandparents are accepted by the grandchildren even when there is so much of perceived lacking in the grandparents is touching.
I am unable to make the connection between Maslow's needs and grandparents life stage ... even in a grandparent only when the other needs are fulfilled they can move to the next level right? Or is it that even when the granparent is hungry (unmet physiological need)she/he is still capable of loving the grandchild and therefore the life stage has reached self actualization .... :)
Paavai: வாங்க...வணக்கம், நன்றி! சிறிய இடைவெளிக்குப் பிறகு இங்கே பார்க்கிறேன், உங்களை! I have taken Maslow's theory to a totally different level as far as internal family bonding is concerned. This is a stage where a "தாத்தா" can shed all his inhibitions, pretences, false prejudices, wrong notions and so on....and show to all around him especially to his grandchildren how nice and loveable a human being he can be. In short, he could do all that he (ever wanted to do?! but) could not do all his life and see for himself how this makes a huge difference at least to him, if not to others? This is "the Self Actualisation" of a totally different kind that I had in mind!
As far as basic needs are concerned, to a certain extent an old person can tolerate and live beyond them. By the way, their needs and abilities are anyway getting shrunk with each passing day! They are more interested in peaceful departure than pleasant existence!
பாரதிதாசன் சொன்னபடி, "நீ எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான் படுத்திருக்கிறாய் என்ற நினைப்பே எனக்குப் பரவசமூட்டுகிறது, பாதுகாப்பு அளிக்கிறது" என்று முதியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொள்வது எவ்வளவு ஆழ்ந்த உணர்வும், உண்மையும் கூட!?
Attagasama puli pottu vilakki irukkeenga, thanks for taking the effort to do it. Bharathidasan lines ippadan first time padikkaren, romba azhagana varigal
Paavai: பேய்க்கடி கடிச்சாக் கூட, பொறுமையாப் படிச்சிட்டு, நல்லா இருக்குன்னு வேற சொல்றீங்களே! நீங்க, (வடிவேலு சொல்றாமாதிரி) "ரொம்ப நல்லவங்க.....!" :)))
Btw, Life at this stage is ALL about QuALIty and NOT QuANTIty!!! The efforts are focussed on being ALIve to the need for making the lives of others around us meaningful with our presence and purpose, and towards ALIgnment (அமைதியாக வாழ்வது, accepting facts, ஒத்துப் போவது) and not on ANTIcs or ANTI-anything for that matter (ஆளுமை, சாகசம் , போராட்டம் , எதிர்ப்பு இதெல்லாம் எப்பவோ மூட்டை கட்டித் தூக்கிப் போட்டாச்சே, பரண் மேலே !) !!! :)))
//சொர்க்கம் என்பது எப்படி இருக்கும் என்று, அதன் வாயிலை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு, இங்கேயே ஒரு "virtual reality show" வாக வழங்கி, வாழ்வின் சுமையான இறுதிக் காலத்தை சுவைக்க வைக்கிறதே அந்தப் பிஞ்சு உள்ளம்//
வாய்க்கப்பெற்றவர்கள் கொடுத்துவைத்தவர்கள்..
அமைதிச்சாரல்: உண்மைதான்! வாங்க... வருகைக்கு நன்றி!
Post a Comment
ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!