ரமேஷ் பிரபா கலைஞர் தொலைக்காட்சியின் முதுகெலும்பில் முக்கிய பகுதி என்று சொல்வது, சன் தொலைக்காட்சியை வளர்த்தவர், அவர்களால் வளர்க்கப் பட்டவர் என்பது எல்லாம் நான் சொல்லித் தெரிந்து கொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை! ஆனால், அவர் கலைஞர் தொலைக்காட்சியில் காலையில் வழங்கி வரும் சந்தித்த வேளையில் எனும் நேர் காணல் நிகழ்ச்சியைப் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படுவதால், கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்! இன்னைக்குக் காலைல முழிச்ச முகம் சரியில்லை போலிருக்கேன்னு தோணுதா? இருக்கலாம்...ஆனாலும், இவ்வளவு தூரம் வந்தாச்சு...மேல படிக்காமலா போயிடப் போறீங்க!
ரமேஷ் பிரபா இந்த நிகழ்ச்சியைப் படைத்து அளிக்கும் விதம் பாராட்டும்படி இருக்கிறது! காரணங்கள் இதோ:
- பலதரப்பட்ட, வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டிய மனிதர்களை நமக்கு அறிமுகப் படுத்தி வைப்பது.
- வெகு இயல்பான நேர்காணல் முறை, பின்புலம்...பல நேரங்களில் நேர் காணல் என்ற நினைவே எழாமல் நாம் மூன்று பேரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது.
- வெகுவாய்ப் பாராட்ட வேண்டிய அளவுக்கு மெனக்கெட்டு ஒவ்வொரு சந்திப்புக்கும் தன்னைத் தயார் படுத்திக் கொள்வது (இதில் அவருடைய குழுவின் பங்களிப்பு கொஞ்ச நஞ்சமல்ல!)
- தயார் செய்து வைத்த கேள்விகளையே கேட்கிறார் என்ற உணர்வை உருவாக்கி உறுத்தாமல் இருப்பது. நேர்காணலின் போக்குக்கு ஏற்ப இயல்பான, மிகவும் தேவையான, நாமே கேட்க நினைத்த கேள்விகளைச் சமயோசிதமாகக் கேட்பது.
- விருந்தினரிடமிருந்து வெளிக்கொண்டு வர வேண்டிய தகவல்கள் மீது அக்கறை காட்டி, கவனம் தவறாது செய்து முடிப்பது. விருந்தினர் இந்த சங்கடத்தை உணராமல் இருக்கும்படி அவரை இயல்பாக வழி நடத்திச் செல்வது.
- எல்லாப் பிரமுகர்களையும் பாமரனிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மூர்க்கத்தனமாக முயற்சி செய்யாதது. அதே நேரத்தில் அடித்தட்டு மக்களுக்கும் சேர வேண்டிய செய்தி இருப்பின், அதைத் தவறாமல் வரவழைப்பது.
- நேர் காணலை ஒரு ஆயுதமாக்கி, கட்சித் தொலைக்காட்சியை கலகத் தொலைக்காட்சியாக மாற்றி விடாதது.
- கழகத் தொலைக்காட்சி என்ற காரணத்துக்காக கட்சி மற்றும் கட்சியைச் சார்ந்த நபர்களையே விருந்தினர்களாக முன் நிறுத்தாதது. (உணர்ந்து கொள்ள முடியாத ஒரு இட ஒதுக்கீடு இருக்கத் தான் செய்கிறது)!
- சென்னையில் தற்போது மழையா வெயிலா என்ற வானிலைத் தகவலையும் நமக்கு இலவசமாகத் தருவது.
- வேலைக்குப் போக வேண்டுமே என்ற எண்ணம் கூட இல்லாமல், முகசவரம் செய்து கொண்டே, முழுவதுமாய்ப் பார்க்க வைத்து விட்டு, தினமும் தாமதமாகச் சென்று, சவரம் செய்த முகத்தையேகூட மேலதிகாரியிடம் காட்ட முடியாத தர்ம சங்கடத்துக்கு நம்மை உள்ளாக்கி, அவர் கொதிப்படைந்து நம் 'அப்ரைசலில்' கைவைக்கும் அளவிற்கு நம் தனிமனித வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்ப்பது.
- காலை நிகழ்ச்சி முடிவில் ஒரு பெண்மணி " .....இன்றைய நிகழ்ச்சி பல புதிய (அரிய) தகவல்கலைத் தெரிந்து கொல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்....." என்று சொல்லிக் கொல்லுவார் பாருங்கள் நம்மை, அதுவும்...'ஒன்றே சொல் நன்றே சொல்' நிகழ்ச்சி முடிந்த உடனே ....ஆஹா! ...அதைக் கண்டு கொள்ளாமலே விட்டு விட்டது.
- யார் யாரோ வராங்கோ! நீங்களும் இருக்கீங்களே...ஹூம்...என்ன பிரயோஜனம்... என்று என் வீட்டுப் பெண்மணி என்னை உசுப்பேத்த, காலையிலேயே எங்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது!
- நாளைக்கு வரும் விருந்தினர் யார் என்று முன் கூட்டியே இவர் சொல்லித் தொலைக்க, அவர் நமக்குப் பிடித்தவராக இருக்க, ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் மறுநாள் பார்க்க முடியாமல் போக, நாம் வருந்த வேண்டி இருப்பது!
சரி! ஒரு வழியா நான் முடிச்சிட்டேன் ...நீங்க ஆரம்பிங்க... கும்மியை :))))
- மனம் திறந்து...(மதி)
12 comments:
Good analysis. Glad that your article (this one) is in Tamil Manam's hot articles list now.
Mohan Kumar: Welcome to my blog. Thank you for your comment. Thanks for the info too. I checked up later and found that it was moving from 10 to 7 in the hotlist on Tamilmanam Homepage, for a greater part of this afternoon, upto 6 pm when I went out with my family. When I came back by 9 pm it has been nudged out of the hotlist by other bloggers! Fair enough!
This is only my third post in the blog space and I am glad it found a place in the hotlist and attracted over 160 visitors in a single day!
NICE ONE..
GOOD BLOG.
SIVA: வாங்க...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி! :)))))))))
! ஒரு வழியா நான் முடிச்சிட்டேன் //
நன்றாக அவதானித்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.
இராஜராஜேஸ்வரி:// நன்றாக அவதானித்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.//
நல்லா கவனிச்சு, சொல்லியிருக்கீங்க! ரொம்ப நன்றிங்க! ஒவ்வொருவு பதிவும் வெவ்வேறு படைப்பு வகையில் அமைய வேண்டுமென முயன்று வருகிறேன்! புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும் அல்லவா? பார்ப்போம், எவ்வளவு நாளைக்கு என்று! :))))))))))
sir, did u see the prog on 6/9/11. can u tell me the name of the guest. Sudha mba professor ai santhtaduku mundaiya naal. avar oru coolie tholilai nu sonna madiri thonriadu...
ofce kelambum nerathla dan idayum parka vendia nirpandam,.. kelambaum mudiama ukandu suvaika sollum manam, late a pona erpadum edainjalagala arpudama solirukeenga... pala murai, nalla vela oru 8.45 avadu mudikraru nu thonum... virundinar pera keela adikadi potalo alladu constant a potu vacha nala irukum... hope RP is listening...
வாங்க வித்யாசாகர்... நன்றி! நீங்களும் நல்லாவே பாதிக்கப் பட்டிருக்கீங்க ... ஹூம்ம்ம்... என்னத்த சொல்ல?
நீங்கள் சொல்வது சரியே... விருந்தினர் பெயரை நாம் அறிந்து கொள்ளவும், நினைவு கொள்ளவும்... இன்னும் கொஞ்சம் அதிக வாய்ப்புகள் தரலாம்...
சுதா அவர்கள் மேலாண்மைத் துறை ஆசிரியர்/பயிற்சியாளர் என்று பார்த்ததாக நினைவு... இடையிலே கூலித் தொழிலாளி எங்கிருந்து வந்தார்? ஆச்சரியமாக இருக்கே...!?
sudha avargalai santhithadarku mundaiya naal santhitha virundinar per theriuma sir...
avar sona oru kavitha enai romba bathichadu...
'vaname uusi kodu kilinjirukra nilatha thaikanum' apadingra porulla sonaru... partheergala
வித்யாசாகர்: நன்றி! "வானமே ஊசி கொடு ... " அருமை! அடடா... நான் இந்த நிகழ்ச்சியைப் பாக்கலைங்க... நல்ல சிந்தனையாளர் போலிருக்கே அவர்!
சந்தித்தவேளையில் நிகழ்ச்சியின் சாரலை தொகுத்து வெளியிடும் நோக்கோடு ஒரு வலைப்பதிவை தொடங்கி உள்ளேன் தாங்கள் அவசியம் வருகை தரவேண்டும் ....
Post a Comment
ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!